März 28, 2025

ஆதரவு கோருகின்றது பல்கலை சமூகம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அனைவரும் வேறுபாடுகள் களைந்து விடுதலை வேண்டி நிற்கும் இனமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர் நாங்கள் கட்சிகளாக குழுக்களாக பிரிந்து என்று ஒரு சிலர் போராட்டம்  செய்யாமல் ஒற்றுமையாக அனைவரும் இணைந்து தமிழ் இனமாக எதிர்வரும் புதன்கிழமை நீதி வேண்டி அணிதிரள்வோம் என எமது இளம் சமுதாயம் ஆகிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் அறைகூவல் விடுத்துள்ளனர்