März 28, 2025

மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியது!

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலமும் இன்று சனிக்கிழமை(13) மாலை கரை ஒதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை(11) மகா  சிவராத்திரி வழிபாட்டிற்காகத் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு மோட்டார்ச் சைக்கிள்களில் சென்ற நிலையில் வழிபாட்டின் பின்னர்  நேற்று மாலை நிலாவெளிக் கடலில் குளிக்கச் சென்றனர்.

இளைஞர்களில் இருவர் காணாமற் போயிருந்த நிலையில் குப்பிழான் தெற்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெளதமன் (வயது-21) நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலம் திருகோணமலைப் பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் இன்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் குப்பிழான் வடக்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் சிந்துஜன் (வயது-21) என்ற இளைஞன் காணாமற் போயிருந்த நிலையில் இன்று மாலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.