டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா தற்காலிக தடை
டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன?டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
சில நாட்களுக்கு முன் ஆஸ்திரியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாதியர் ஒருவர், இரத்தம் உறைந்து உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், டென்மார்க்கிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், டென்மார்க், நோர்வே, ஈஸ்டோனியா, லத்வியா, லித்துனியா மற்றும் லக் ஷும்பர்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.