ரஷ்யாவில் சமூக ஊடகள் மீது வழக்குகள் பதிவு
ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக ட்விட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது சிறுவர்களை போராடத்தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் ரஷ்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் பதிவுகள் நீக்காமல் இருந்ததால் டிக்டாக், டெலிகிராம், முகநூல், கூகுள் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.