பேத்தை தவளையும் கத்துகிறது!
ஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பேரணிக்கு போட்டியாக யாழ்.நகரில் ஆவா அருணும் இன்று ஊர்வலம் நடத்தியுள்ளான்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள வலைபதிஞர் ஒருவர் கடந்த 30 வருடங்களாக குற்றவாளிகளை தமிழ் மக்களின் தலைவர்களாகவும் அபிவிருத்தி நாயகர்களாகவும் திணிப்பதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டு வருகின்றது .
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ புலனாய்வு துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து செயல்படும் குற்றாவளிகளை தமிழ் சமூகத்தின் தலைவர்களாக அடையாளம் காட்டி வருகின்றது.
அந்த வகையில் “ அருண் சித்தார்த்“ என்கிற கஞ்சா வியாபாரியை தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவம் தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சிங்கள இனவாத அமைப்புகள் ஊடக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது
கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவர் எப்படி தமிழ் சிவில் சமூக பிரதி நிதியாக அடையாளம் காட்டப்பட முடியும் ?
பண மோசடி வழக்குகள் , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் என சமூக பிறழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் தமிழ் சமூகத்தை எந்த மட்டத்தில் பிரதிநித்துவம் செய்ய முடியும்
ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிய விடயமல்ல ..
டக்ளஸ் தேவானந்தா என்கிற குற்றவாளியை யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக நிலப்பரப்புக்குள் அழைத்து வந்து இலங்கை இராணுவ துணைப்படையாகவும் இயக்கிய சம நேரத்தில் இலங்கை அரச ஆதரவு அரசியல் கட்சியாகவும் செயல்படுத்தியதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னா வெற்றி கண்டு இருந்தார் .
அதே போல கிழக்கில் பிள்ளையான் , கருணா குழுக்களை கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் அனுசரணையில் இலங்கை புலனாய்வு துறை பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெண்டாவிதரனா இலங்கை இராணுவ துணைப்படையாகவும் அரச ஆதரவு அரசியல் கட்சியாகவும் செயல்படுத்தியதில் வெற்றி கண்டு இருந்தார் .
இவர்கள் மீது எல்லாம் ஆயிரக்கணக்கான கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது . கற்பழிப்பு தொடர்பான குற்றசாட்டுகள் இருக்கிறது . எண்ணற்ற படுகொலை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. விபச்சார வலையமைப்புடன் இருந்த தொடர்புகள் பற்றிய குற்றசாட்டுகள் நிலுவையில் இருக்கிறது. மணல் உட்பட இயற்கை வளங்களை திருடிய வழக்குகள் நிலுவையில் இருக்கிறது
உண்மையில் குற்ற பின்னணி கொண்ட இவர்கள் யார் மீதும் குறைந்த பட்ச விசாரணையை நடத்த கூட இலங்கை நீதி நிர்வாக கட்டமைப்புகள் தயராக இல்லை . மாறாக இவர்களை எல்லாம் தமிழ் மக்களின் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் பாராளமன்ற உறுப்பினர்களாகவும் உருவாக்கி இருக்கின்றார்கள்
இது தவிர கொழும்பில் துப்பாக்கி ஏந்தி வன்முறையில் ஈடுபட்ட வரலாற்றை கொண்ட அங்கயன் இராமநாதன் போன்ற பண பலம் கொண்ட ரவுடிகளையும் தங்களின் பிரதிநிதிகளாக அடையாளம் காட்டி வருகின்றார்கள்
குறைந்த பட்சம் வட மாகாண சபை இருந்த காலத்தில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ள தமிழ் சமூகங்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை , திட்டங்களை முன்னெடுத்திருக்கலாம்.
இதை தான் 1987 களில் இந்தியா இராணுவமும் செய்தார்கள் . தோட்டு தில்லை , மொட்டை மாமா , கொட்டடி மணி , சின்னத்தம்பி , சுருள்வான் என ஊர் தெருப்பொறுக்கிகள் பெயர் எல்லாம் சூட்டி கொண்டு ரவுடித்தனங்கள் செய்து கொண்டு தெரிந்தவர்களை பயன்படுத்தி கடத்தல்கள், கற்பழிப்புகள் , கொலைகள் என எல்லாவற்றையும் செய்வித்தார்கள் . பின்னர் அவர்களையே மாகாணசபை உறுப்பினர்கள் ஆக்கினார்கள்
தமிழ் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களையும் அவர்களின் தேவைகளையும் விலை பேசி அதை அபிவிருத்தி என பெயர் சூட்டி குற்றவாளிகளை ஊர் பிரமுகர்கள் ஆக்கும் வேலைகளை செய்கிறார்கள்
இது பற்றி இனியும் சிந்திக்காமல் இருந்தால் அருண் சித்தார்த் போன்றவர்கள் கூட இன்னும் சில ஆண்டுகளில் பாராளுமன்ற பிரதிநிதிகளாகவும் உருவாக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.