யாழில் தினவெடுக்கும் மருத்துவர்கள்?
வறுமை,தொழில் இன்;மையென தமிழ் தாய்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்க மறுபுறம் தேசம்; அதிர்ந்து கொண்டிருக்க அதே தமிழ் மக்களை வைத்து வயிறு பிழைக்கும் மருத்துவர்கள் சிலர் சிங்கள கோத்தபாய அரசின் இனஅழிப்பிற்கு முண்டு கொடுக்க புறப்பட்டுள்ளமை மருத்துவ வட்டாரங்களிடையே பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
இறுதி யுத்த வலயத்தினுள்ளும் , தமிழர் தாயகத்திலும் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவசேவையினை யுத்த காலத்தில் வரலாற்று கடமையாக ஆற்றிய மருத்துவர்களை இந்நாள் வரை தமிழர் தாயகம் கொண்டாடியே வருகின்றது.
ஆனால் அவையெல்லாவற்றினையும் குப்பை கிடங்கினுள் போடுகின்றதொரு நடவடிக்கையாக ஒரு சில மருத்துவர்கள் களமிறங்கியிருக்கின்றமை ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்தையும் தலை குனிய வைத்துள்ளது.
ஜநா அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில் வெள்ளையடிக்க முதன் முறையாக தேசிய வெசாக் நிகழ்வை ஒரு சிங்கள குடிகளேனும் இல்லாத நயினாதீவில் நடாத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது.
அது தொடர்பான விசேட கூட்டம் அண்மையில் அலரி மாளிகையில் நடந்திருந்ததுடன் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்திலும் நடந்துள்ளது.
வெசாக் பண்டிகையின் தேசிய நிகழ்வானது இவ்வருடம்(2021) யாழ் மாவட்டத்தில் வேலணை பிரதேச பிரிவிற்குட்பட்ட நயினாதீவில் அமைந்துள்ள “நாகதீப விகாரை“யில் இடம்பெறவுள்ள நிலையில் தேசிய நிகழ்விற்கான முன்னேற்பாடுகள், தேவைப்பாடுகள், எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் போன்றவை பற்றி ஆராயவே யாழ்ப்பாண கூட்டம் நடந்துள்ளதாக மற்றொரு அரச பிரதிநிதியான அங்கயன் இராமநாதன் விளக்கமளித்துள்ளான்.
நேற்றைய மாவட்ட செயலக கூட்டத்தில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தன தலைமையில் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சாள்ஸ் மற்றும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் கல்லா கட்டும் கண் நோயியல் மருத்துவரான மலரவனும் மகப்பேற்றியல் மருத்துவர் முகுந்தன் என்பவனும் பிரதான நிதி பங்காளன்களாகியிருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான நன்றியறிதலாக அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இவர்கள்; இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் காணக்கிடைக்காத இவ்விருவரும் தனியார் வைத்தியசாலைகளில் தமிழ் மக்களிடம் கல்லா கட்டுவதில் கைதேர்ந்தவர்கள்.
அவ்வாறு ஏழை எளிய மக்களிடம் கல்லா கட்டுவதை இனஅழிப்பு கோத்தா அரசிற்கு வெள்ளையடிக்க அள்ளிக்கொட்ட துடிப்பதென ஏனைய மருத்துவர்களிடம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது
இதனிடையே கண் நோயியல் மருத்துவரான மலரவனுடைய மனைவியின் தந்தை கருணா-பிள்ளையான் கும்பலால் கொழும்பில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.