November 23, 2024

2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு!

தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக் கண்டுபிடித்தனர்.வெண்கல மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு மர பேனல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், வெண்கல மற்றும் தகரம் பதக்கங்களில் பொறிக்கப்பட்ட பல்வேறு கதைகள் அதில் உள்ளன.

4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த தேர் சிதையாமல், மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.