கிழக்கு சாணக்கியன்: வடக்கு மாவையாம்?
மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் வடக்கில் மாவை சேனாதிராசாவையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்;று வவுனியாவில் இடம்பெற்றது.
இதன்போதே கிழக்கு முதல்வர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனையை சிறீதரன் முன்வைத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும்.
கடந்த மாகாண சபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனுக்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.
அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறீதரன் முன்வைத்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறீதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.