காரைநகர் இந்துக் கல்லூரியில் 18ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியப் பணியாற்றி கல்லூரியின் விஞ்ஞானக் கல்வி, விளையாட்டுத்துறை ஆகியவற்றின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தவரும், ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரிய ஆலோசகருமான திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களின் அன்பு மனைவியும், யாழ்.திருக்குடும்ப கன்னியர்மட மகா வித்தியாலயத்தின் ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய பங்கஜதேவி அவர்கள் 26-02-2021 அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
திருமதி பங்கஜதேவி சோமாஸ்கந்தன் (இளைப்பாறிய ஆசிரியை யாழ்திருக்குடும்பகன்னியர்மடம் மகா வித்தியாலயம்) வியாபாரிமூலை பருத்தித்துறையை பூர்வீகமாகவும், 327 நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பங்கஜதேவி சோமாஸ்கந்தன் அவர்கள் 26.02.2021 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான Dr. க. கனகசபாபதி, சௌந்தராம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமாஸ்கந்தன் (ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்) இன் அன்பு மனைவியும்,
சுதாகர் (கணனி விஞ்ஞானத்துறைத் தலைவர், யாழ் பல்கலைக்கழகம்) இன் அன்புத்தாயாரும்,
எழினா (ஆசிரியை, புனித பத்திரிசியார் கல்லூரி) இன் பாசமிகு மாமியாரும்,
சேதுநாயகி (USA), காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, Dr. இரத்தினவடிவேல், சண்முகநாதன் (பொறியியலாளர்) மற்றும் மனோன்மணி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ் இந்து மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற சற்குருநாதன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சிவப்பிரகாசம் (வை.கா.சி) மற்றும் Dr. குணரதி (அவுஸ்திரேலியா), செல்வலக்ஷ்மி (கனடா) காலஞ்சென்ற Dr. வசந்தநாதன் மற்றும் கிருபாவதி (UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரோஷன் (புனித பரியோவான் கல்லூரி), கோபினா (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28.02.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பையன்மணல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.