எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்
எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தார்மீக்க்கடமையாகும், எமதுபோராட்டங்களின் முக்கியத்தை மனதிற்க்கொண்டு அணிதிரள்வோம் . சர்வதேச நாடுகளின் கொள்கைவகுப்பாளர்கள் , அரசியல்வாதிகள் எமை நோக்கிப் பார்க்கும் போது நாம் சிறியளவில் கூடும் போது அது எமக்கு சாதகமாக அமையாது!! எனவே காலமறிந்து இவ்வாறான போராட்டங்களை முக்கியப்படுத்தி அணி திரள்வோம். நாம் போராடாவிட்டால் சர்வதேசமும் அறிக்கையுடனும் சம்பிரதாய நிகழ்வுகளைப் போற்றிவிட்டும் இருந்துவிடுவர். எனவேதான் நாமே எமக்காக போராடுவோம் !! ஒழுங்கு செய்பவர்கள் எவ்வளவோ சிரமங்களின் மத்தியில்தான் செய்கின்றனர் மக்கள் பங்கேற்க்காவிட்டால் முடிவு யார் கையில்??? பொத்துவில் — பொலிகண்டியைப் புகழ்ந்தோம் கெடுபிடியிலும் எம் தாயக மக்கள் உறுதியாக உள்ள போதும் நாம் சுகபோக வாழ்வா?? அனைவரும் எமது மனச்சாட்சசியையும் தட்டிக்கேட்போம்!!!
தெளிவாக உணர்வுபூர்வமாக அனைவரும் சிந்திப்போம். இனத்திற்க்காக மற்றவர்கள் செய்வதைப் பார்த்து கைதட்டுவதை விட்டு நாமும் ஏதாவது செய்வோம்””