இலங்கையிடம் பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க முடியாது – மனித உரிமை கண்காணிப்பகம்
இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாரதூரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கவோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலோ இலங்கைக்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை என்பது தெளிவாகியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் உரையை சுட்டிக்காட்டியே மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் குறித்த கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றங்களை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மறுத்துள்ளார்.
இதுவரைக்காலமும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையையை வெறும் ‚பிரசார நடவடிக்கை‘ என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வானதொரு நிலைப்பாட்டை கொண்டுள்ள இலங்கையிடம் ஆக்கப்பூர்வமான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.