März 28, 2025

கண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது!

 

தமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள „கண்டா வரச்சொல்லுங்க“ பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து காணொலி வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.

TIKTOK செயலி ஊடாக   தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளைப் பதிவிட்ட 25 வயது இளைஞர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்   இந்தசெயலி ஊடாக  LTTE அமைப்பின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் முதலில் முல்லைத்தீவிலும் பின்னர் ஹட்டனிலும் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது