மியன்மார் மீது தடைகள் போட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!
மியன்மார் மீது பல தடைகளை விதிக்கத் தயாராய் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமான ராணுவத் தலைவர்களையும், அவர்களது சொத்துகளையும் இலக்காகக் கொண்டு அந்தத் தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை மியன்மார் எடுக்கவேண்டுமெனவும் சட்டரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்றும் அவர்கள்வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் ( Antonio Guterres) தடைகள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தது.