கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி
கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி
ஏகடந்த வாரம் எமது பிரதான செய்திகளில் ஒன்றாக பிரம்டன் மாநகரசபைக்குச் சொந்தமான பூங்கா ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவுத்
தூபி அமைப்பதற்கான சபையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக பிரம்டன் மாநகரசபையின் மேயர் பெற்றிக் பிரவுண் அவர்களின் செய்தியை விபரங்களுடன் பிரசுரித்திருந்தோம். இதே போன்று மார்க்கம் நகரசபையின் 7ம் வாட்டார அங்கத்தவர் காலித் உஸ்மான் அவர்களது முயற்சியினால் மார்க்கம் நகரசபையின் முழுமையான அனுமதியோடு மாநகரசபையின் 7ம் வட்டாரத்தில் தமிழின நினைவுத்தூபி அமைக்கும் திட்டத்துக்கு நகரசபை அனுமதி வழங்கியுள்ளதாக மேற்படி வட்டாரத்தின் உறுப்பினர் காலித் உஸ்மான் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேற்படி நகரசபை உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கைத்தீவில் தமிழர்களின் அவல நிலை நிலையை குறிக்கும் வகையில் இந்த நினைவுத் தூபி மார்க்கம் நகரில் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.