November 25, 2024

நடுவானில் தீ பிடித்த விமானத்தின் இன்ஜின். அவசரமாக தரையிறக்கி 231 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி.

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் (United Airlines) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777 ரக பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, வலதுபக்க இன்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது.
உடனடியாக டென்வார் விமான கட்டுப்பாட்டு அறைக்கு Mayday சமிக்ஞையை கொடுத்து நிலைமையை விளக்கிக் கூறி அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
எனினும் தரையிங்க முதலே விமானத்தின் இன்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது. விமானம் டென்வர் வரை செல்லுமா என்ற அச்சமும் ஏற்பட்டது.
எனினும் பதற்றப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை டென்வர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து பயணிகள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.