November 25, 2024

மாவட்ட செயலரும் கோரிக்கை!

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு ஒத்துழைக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் கோரியுள்ளார்

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் மூன்று நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில கொரானா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலைமையில் யாழ் மாவட்டத்தில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 610 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

தற்பொழுது மாவட்டத்தில் இயல்பு  நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி உள்ளன இருந்தபோதிலும்  சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கின்றது

ஏனென்றால் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற இயல்புநிலை மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் கடந்தகால அவதானிப்புகளின் படிவெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஊடாக  தொற்று இங்கே பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களையும் பாதுகாத்து தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தாங்களாக முன்வந்து தங்களுடைய தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் சிறந்தது

தற்பொழுது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது புதியதொரு வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக  எதிர்வு கூறப்பட்டுள்ளது எனவே அபாய எச்சரிக்கையை மனதில் இருத்தி பொதுமக்கள் தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் மிகவும் அவசியமானதாகும்

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் எமது மாவட்டத்தில் மேலும் கொரோனா கொத்தணி உருவாகாது தடுக்க முடியும் அத்தோடு பொதுமக்கள் மீண்டும் ஒரு முடக்கல் நிலைக்கு எமது மாவட்டத்தை இட்டு செல்லாது பாதுகாத்தல் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க துணைவேந்தர் விடாப்பிடியாக உள்ள நிலையில் மாவட்ட செயலர் இதனை அறிவித்துள்ளார்.