பழநெடுமாறனுக்கு நலன் வேண்டி நல்லூரில் வழிபாடு!
நோயுற்றிருக்கும் பழ நெடுமாறன் நலம் வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபட ஏற்பாடாகியுள்ளது.
87 வயதைக் கடந்த திரு பழ நெடுமாறன் ஐயாவுக்கு சென்னையில் அரசு மருத்துவமனையில் முள்முடித் நோய் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவருகிறார்.
குட்டிமணியை தங்கத்துரையை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்றவர். பிரபாகரனையும் உமாமகேசுவரனையும் பிணையில் எடுத்து வெளிக்கொணர்ந்தவர்.
இராமேச்சரத்திலிருந்து ஈழத் தமிழர் நலம் காக்க படகுப் பயணத்தை தொடங்கியவர்.
அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தியிடம் அழைத்துச் சென்று இலங்கைச் சிக்கலை எடுத்துச் சொல்லி அவரை ஈழத்தமிழர்கள் திருப்பியவர்.
ஈழத் தமிழர்கள் தொடர்பாக நூற்றுக்கும் கூடுதலான வெளியீடுகளை அவற்றுள் சில ஓராயிரம் பக்கங்களுக்கும் கூடுதலான பக்க நூல்கள் வெளியிட்டவர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழருக்காக தன்னுடைய உடல் பொருள் செல்வாக்கு அனைத்தையும் காலம் கருதாது இரவு பகல் எனவும் தூரம் கருதாது இந்தியா முழுவதும் சென்று உலகத்தில் பல நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியவர், கடுமையாக உழைத்தவர்.
மதுரையில் வட இந்தியத் தமிழர்களையும் ஏனைய மாநில தலைவர்களையும் அழைத்து ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு நடத்தியவர். தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு நடத்தி விழிப்புணர்வை உருவாக்கியவர்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை கருங்கல்லில் செதுக்கி உருவாக்கியவர்.
அவருடைய திருமகள் உமா ஈழத்தமிழர்களுக்காக ஆற்றும் பணிகள் பட்டியலிட முடியாத அளவு நீளும்.
பழ நெடுமாறன் நோயுற்று இருக்கிறார் மருத்துவமனையில் இருக்கிறார்
எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு வழிபாட்டில் கட்சி கருத்து வேறுபாடுகளை ஒதுங்கிப் புறந்தள்ளி, தமிழர் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொள்க
அப் பெரியார் நலம் பெற வழிபட ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலுக்கு வருமாறு ஈழத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைப்பதாக மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.