இனி நடு வீதியில் தான் தமிழ் சமூகம்:சரா!
வடக்கில் முப்படைகளிற்கான காணி பிடிப்பு மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் தங்கியிருக்க காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 51 ஏக்கர் காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கென முயற்சிகள் இன்று தடுத்து நிறுத்தப்;பட்டுள்ளது.
இதனிடையே காரைநகர் காணி சுவீகரிப்புத் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் கருத்து தெரிவிக்கையில் 30 வருடங்களுக்கு மேலாக கடற்படை தன்வசம் வைத்துள்ளது . இவற்றை எக்காரணம் கொண்டும் தனியார் காணிகள் அபகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் இந்த அபகரிப்புக்கு நாமே முன்னுதாரணமாக இருப்போம். முன்னுதாரணமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் .
தமிழ் மக்கள் அரசாங்கத்தினுடைய பிரதிநிதிகளை தெரிந்தெடுத்தமையால் அரசாங்கத்திற்கு சார்பாக அரசாங்கப் பிரதிநிதிகள் தங்களால் எதுவும் கதைக்க முடியாத நிலையில் இந்த உத்தியோகத்தர்களை நிரப்;பந்திக்கிறார்கள எனவும் சரவணபவன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.