ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன்
ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் இரண்டு நாட்களுக்கு முன்னால்
உலகெங்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..
நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது Nasa லால் அனுப்பப்பட்ட ரோவர் என்னும் விண் கலம்
(ஏற்கனவே தரையிறங்கினாலும்) இது மிக தெளிவாக எந்த பாதிப்பு இல்லாமல் இறங்கியது ஓர் மைல் கல் ..
.
ரோவர் அனுப்பியதில் மிக முக்கிய பங்கு இவருக்கு உண்டு இது ஓர் டீம் ஒர்க் ..
சின்ன வயதில் ஸ்டார் ராக் பார்த்த அந்த தாக்கமே தான் நாசா விஞ்ஞானியாக்குவதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார் ..16 வயது வரை சிறுவர் மருத்துவராகுவதில் இருந்தவர் தனது பாதையை மாற்றி செவ்வாய் கிரகத்தில் பாதை அமைத்தார் ஏறத்தாழ 293 மில்லியன் மைல்கள் ( 472 மில்லியன் கிலோ மீற்றர் )
203 நாட்கள் பிரயாணம் 2. 7 பில்லியன் டொலர் புராஜக்ட் இலகுவல்ல ..
.
அமேரிக்கா ஒரே நேரத்தில் பல விடயங்களை கையாளும் கண்டு பிடிக்கும் கொரோனா உச்ச நேரத்திலே 2020 ஜூலையில் அனுப்பப்பட்டது இந்த விண் கலம் …இன்றுதான் சேர்ந்தது ..சூரிய குடும்பத்தில் உள்ள அயல் கிரகத்தில் சென்று ஆராய்ச்சி பண்ணவே மனித பிறப்பில் இருந்து இன்றுவரை இப்போதுதான் பயணித்துள்ளோம் .
.
இதைப்போல லச்சக்கணக்கான சூரிய குடும்பங்கள் உண்டு .. பிரபஞ்சம் யாருக்கும் விடை தெரியாத புதிர்
சுவாதி மேனன் இந்தியாவில் இருந்து இருந்தால் இந்த இடத்துக்கு வந்து இருப்பாரோ தெரியாது ..???
கடந்த வருடம் இந்தியா சந்திரனுக்கு அனுப்பி தோல்வியில் முடிந்தது ஓர் துக்ககரமான செய்தி .. இந்திய விஞ்ஞானிகளும் வைத்தியர்களும் மிக கெட்டிக்காரர்கள் …
இந்த நேரத்தில் இந்திய விண் வெளி வீராங்கனை Kalpana Chawlaநினைவு படுத்துகிறேன் பூமியை ஊடறுத்து வரும் வேளையில்
விண் கலம் பற்றி எரிந்து கண் முன்னே நடந்த அந்த கொடுமையை நேரடியாக தொலைக்காட்சி வழியாக
2003 இல் கண்டு கண் கலங்கினேன் .. யாரோ ஒருவர் நமக்கு முன்னால் பாதைகளை இலகுவாக அமைத்து
தருவதில் நாம் இலகுவாக பயணிக்கின்றோம் … பெருமைப் படுகிறோம்
“பூமியில் உள்ளவைகளையல்ல மேலானவைகளை நாடுங்கள் “ இது வேதாகமத்தில் பவுல் அடிகளார்
மக்களுக்கு சொன்னது அவர் சொன்னது இறைவன் வாழும் இடத்தை …
ஆம் இந்த பூமியே சுற்றி வரும் நாம் இந்த உலகத்தை கடந்துதான் செல்ல வேண்டும் என்னும் பல கிரங்களுக்குள் செல்வோம்
மேலே எமக்கான பல ஆச்சரியங்கள் காத்து இருக்கிறது …
.
பயணங்கள் முடிவதில்லை
மனித ஆய்வுகளும் அப்படியே