டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்!
இலங்கை தொடர்பான தனது கொள்கை தீர்மானத்தை டெல்லி மீளாய்வு செய்யவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இந்தியாவை பொறுத்தவரை தனது பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது.ஆனால் இலங்கை தொடர்பில் இந்தியா இனியாவது தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யவேண்டும்.
இந்திய-சீனா யுத்தத்தின் போதும் சரி இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் சரி இலங்கை அரசு என்ன செய்ததென்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கையில் இந்தியாவின் நட்புதரப்பு என்றுமே தமிழ் மக்களே.
ஈழத்தமிழ் மக்களது தொப்புள் கொடி உறவுகளும் இந்திய தமிழகத்திலேயே இருக்கின்றனர்.
ஆதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஈழ தமிழ் மக்கள் விரும்ப போவதில்லை.
இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக,பொருளாதார ரீதியாக பலமாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் பாதுகாப்பு வலுப்பெறும்.
இதனை டெல்லியிலிருந்து திட்டமிடும் அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
டேல்லியிலுள்ள அதிகார மட்டத்தின் இலங்கை தொடர்பிலான போக்கு தொடர்பில் எமது ஆதங்கத்தை பதிவு செய்யவிரும்புவதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.