தண்ணியடித்தாயா? மாநகரசபையில் விவகாரம்!
யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லை.
புளொட்ட சார்பு உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் சபையில் இன்று குற்றச்சட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தன்மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு தான் தயாராக இருப்பதாக ப.தர்சானந் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் குறித்த பரிசோதனையினை சட்ட வைத்திய அதிகாயால் தான் பரிசோதிக்க முடியும் எனவும் அதற்காக தான் எழுத்து மூலமாக எழுதி அவரை அனுப்புவதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உறுப்பினர் தர்சானந் விரும்பியதால் பரிசோதனைக்கு செல்லுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவரிடம் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தான் பரிசோதனைக்கு செல்லாது, சபை அமர்பில் கலந்துகொள்ள விரும்பவில்லை என தெரிவித்து தர்சானந் வெளிநடப்பு செய்துள்ளார்.
அதேபோன்று யாழ்.மாநகர சபை முதல்வரின் வாகனத்திற்கு, சபை சாரதி அல்லாமல் வேறு ஒரு சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
மாநகர சபையின் முதல்வர் தான் தனிப்பட்ட வகையில் தனக்கு நம்பிக்கையான சாரதி ஒருவரை நியமிப்பது தொடர்பன பிரேரனை ஒன்றை சபையில் முன்வைத்திருந்தார்.
இந்த விடையம் தொடர்பில் இன்றைய சபை அமர்பில் நீண்ட நேர வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் இதனை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கலாம் என உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்ளிக்க 10 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அத்தோடு 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அதே வேளை 3 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.
இதன் மூலம் 20 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபைக்கு சொந்தமான வாகனத்தினை பயன்படுத்தாமல் தனது சொந்த வாகனத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.