சிறுத்தீவு அன்னைக்கு திருவிழா!
யுத்த காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சிறுத்தீவு லூர்து அன்னை சிற்றாலய. வருடார்ந்த திருவிழா நடந்தேறியுள்ளது.
வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடைப்பட்ட சிறு தீவான சிறுத்தீவு மக்கள் குடியிருப்புக்களற்ற நிலையில் கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஒய்வெடுக்கும் இடமாகும்.
கடல் வழி தப்பித்துவரும் பொதுமக்கள் பலரும் படைகளால் கொல்லப்பட்ட தீவில் அமைந்திருந்த படைமுகாம் பின்னர் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குருநகர் பங்கின் சிறுத்தீவு லூர்து அன்னை சிற்றாலய. வருடார்ந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30மணியளவில் நடைபெற்றது.