காகிதப் போத்தல்களைத் தயாரிக்கும் முயச்சியில் கோகோ கோலா நிறவனம்
கோகோ கோலா நிறுவனம் தனது குடிபானங்களை காகிதப் போத்தல்களில் விற்பனை செய்யும் பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்த முயற்றியின் ஒரு பகுதியாக காகிதப் போத்தல்களை உருவாக்கும் டென்மார்க்கைத் தளமாக இயங்கிவரும் பபோகோ நிறுவனத்துடன் (Paboco) காகிதப் போத்தல் தாயாரிப்பது தொடர்பில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்து இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்நிறுவனம் பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக முழுமையான மாற்றீடு ஒன்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றது. அதன் முதற்படியாக காதிதப் போத்தல்கள் அறிமுகப்படுத்துகிறது. அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு மறுசுழற்சி முறையில் காதிதப் போத்தல்களைப் பயன்படுத்த நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது.
புதிதாககப் உருவாக்கப்பட்ட காதிதப் போத்தல்களில் இன்னும் சிறிதளவான பிளாஸ்டிக் உள்ளது. ஆனாலும் முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத காகிதப் போத்தல் உருவாக்கம் பற்றி நகர்ந்து செல்கின்றது.
குறிப்பாக புதிதாக வடிவமைக்கப்பட்ட காகிதப் போத்தலில் தனது பானத்தில் காற்று உள்ளே புகாதவாறும் சுவையில் மாறுபாடு ஏற்படாதவாறும், பானத்தால் காதிதம் கரையாதவாறும் உள்பகுதியில் மெல்லிய பிளாஸ்டிக் பயன்படுத்துகிறது. அத்துடன் மூடிப் பகுதியிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உலகை மாசுபடுத்துகின்ற முதல் தர வரிசை பட்டியலில் கோகோ கோலா நிறுவனம் முதல் இடத்திலும், பெப்சி நிறுவனம் இரண்டாம் இடத்திலும், நெஸ்லே நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.