November 25, 2024

சத்திய சோதனை: மனித உரிமையை காப்பாற்ற ஈபிடிபியும்!

இன அழிப்பு அரசிற்கு வெள்ளையைடிக்க தமிழர்களை சிங்களதேசம் பகடை காய்களாக பயன்படுத்துகின்றது.

அவ்வகையில் ஈபிடிபி தரப்பை சேர்ந்த யோகேஸ்வரிக்கு கதிரை கொடுத்துள்ளார் கோத்தபாய.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமால் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பால்நிலை சமத்துவத்தை பிரதிபலிக்க வேண்டியதைக் கவனத்தில்கொண்டு யோகேஸ்வரி பற்குணராஜாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.