November 25, 2024

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருறுளிப்பயணம்

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது.

21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணுகின்றது.

இருப்பினும் 2009ம் ஆண்டில் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டங்களின் தொடர்ச்சியில் பல முன்னேற்பாடுகளை சர்வதேச மத்தியில் தமிழர்கள் நாம் கண்டிருக்கின்றோம். அந்தவகையிலே 08.02.2021 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் (நெதர்லாந்து) ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 12.02.2021 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் Anthisnes மாநகர சபை முதல்வர் என முக்கிய அங்கம் வகிப்பவரிடமும் , Attert மாநகரசபை உறுப்பினரும் மற்றும் பெல்சிய பாராளுமன்ற உறுப்பினருமானவர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அக்கலந்துரையாடலில்,  எதிர்வரும் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்த விதிமீறல்கள், மற்றும் தமிழின அழிப்பு சார்ந்த குற்றச்செயல்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே தீர்வு என்பதனை  அனைத்து நாடுகளும் வலியுறுத்த வேண்டும் என எடுத்துரைத்து மனுக்களும் கையளிக்கப்பட்டது. மற்றும் பெல்சிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரனையினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியும் அழிக்கப்பட்டு அவை சார்ந்த பிற பாராளுமன்ற உறுப்பினர்களோடு தொலைபேசியிலும் உரையாடப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணைய வழிச்சந்திப்பும் இடம்பெற்றது. மேலும் 450Km தொலைவு கடந்து தன் இலக்கினை நோக்கி Netharlands, Belgium, நாடுகளைத் தொடர்ந்து Luxembourg நாட்டினை அண்மித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் எம் மண் மீட்கப்படும் எனும் நம்பிக்கையில் எமது போராட்டத்தின் இன்னோர்வடிவமாக இருக்கக்கூடிய மனித நேய ஈருருளிப்பயணம் மாவீரர் மற்றும் இயற்கையின் துணையோடு பயணிக்கின்றது.