November 25, 2024

வெட்கத்தில் சரத் பொன்சேகா!

தமிழ் மக்களது பேரணிகான தடை உத்தரவை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே, நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரும், பாதுகாப்பு படையினரை கொலை செய்ததாக சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்தமைக்காக பாதுகாப்பு அப்புறப்படுத்தப்பட்டதாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு பிரிவினரை கொலை செய்தவர்களிற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் சுமந்திரனின் பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,சுமந்திரன், அனைத்து சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவே செயற்பட்டார்

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.