März 28, 2025

அரச ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு எதிராக அரச புலனாய்வு சிறு கும்பல்களை கொண்டு போராட்டங்களை நடத்திவருகின்றது.

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னி மக்கள் அமைப்பு , வவுனியா மாவட்ட மக்கள் காப்பகம் ஆகியவற்றினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று (06.02.2021) காலை 9.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமது முகங்களை மறைத்தவாறான கும்பல் ஒன்றே காவல்துறை பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஏற்கனவே இதே பாணியில் யாழிலும் அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது