November 25, 2024

குருந்தலூர் குருந்தூர் ஆகியது:புஸ்பரட்ணம்!

 

வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில்  குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில்

இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது

இந்த குருந்தலூரில்  பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாடு இருந்துள்ளது ஆகவே அந்தப்  பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள்  என்பதில் ஐயமில்லையென தெரிவித்துள்ளார் யாழ் கல்கலைகழக  தொல்லியல் வரலாற்றுத்துரை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் .

குருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் முக்கியத்துவமுடைய இடங்களில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவையாகும் என்று எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ள நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.