நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு நினைவூட்டியுள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசத்திற்கு தலைமை தாங்குகையில் தான் பௌத்தபோதனைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி அனைத்து இலங்கையர்களுக்கும் சமஉரிமை உறுதிப்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதி நடவடிக்கைகளிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – மீண்டும் தீவிரவாதத்தில் இலங்கையில் தலை தூக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களிற்கு விற்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.