கைது செய்வாராம் ஊடகப்பேச்சாளர்!
இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டித்து, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்ட களத்தை திறந்துள்ளனர்
அத்துடன் வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பித்துள்ளனர்.
இன்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி வரை தமது போராட்டம் சுழற்சிமுறையில் இடம்பெறவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துமுள்ளன.
இதனிடையே அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை காவல்துறைக்குள்ள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.