மீண்டுமொரு முறை கூடி கலைந்தனர்?
வெற்று கூட்டமாக கூடி கலையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்றும் கூடி கலைந்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று முடிந்த நிலையில் யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்றைய தினமான செவ்வாய்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தலைமையில் கூட்டம் கூடியிருந்தது.
கூட்டத்தில் வழமை போலவே புதிதாக தோற்றம் பெற்றுள்ள கூட்டணி பிரமுகர்களான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், ஆபிரகாம் சுமத்திரன் ஆகியோருடன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானமும் பங்கெடுத்திருந்தார்.
அவர்களுடன் யாழ் மாநகர முதல்வர், நகரசபை நகரபிதா, பிரதேசசபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மாநகரசபை ஆணையாளர், கல்வி அமைச்சின் செயலாளர், திணைக்களம் சார் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், கடற்றொழில் சார் அமைப்புகள், பிரதேச செயலக சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ கட்டளை அதிகாரிகள் என பல தரப்பினரின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.