தடுப்பூசி பக்கவிளைவுகளை உண்டாக்கவில்லை, காய்ச்சல் வருவது சாதாரணம், மக்களும் அச்சப்படாமல் தடுப்பூசி பெறவேண்டும் என்கிறார் பணிப்பாளர்..
யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் உண்டாகவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பணிப்பாளர் மேலும் கூறியுள்ளதாவது, தடுப்பூசி போட்டு இரண்டு நாட்கள் கடந்து விட்டன. காய்ச்சல் தலையிடி ஏதும் எனக்கு வரவில்லை.
சிலருக்கு காய்ச்சல் வந்ததாக அறிககின்றேன். சிறிய குழந்தைகளுக்கு ஏனைய தடுப்பூசி போடுகின்ற போது இவ்வாறு காய்ச்சல் ஏற்படுவது வழமை. ஆகவே இதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.