நான் அபிவிருத்திக்கு மட்டும்:அங்கயன்!
யாழ்ப்பாண மக்கள் அபிவித்திக்கு தன்னையும் மற்றயவை பற்றி பார்க்க மற்றவர்களையும் நாடாளுமன்றிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் அங்கயன் இராமநாதன்.
வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்னும் 3327.63 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கு மேலும் புதிதாக கட்டடங்கள் அமைப்பதைத் தடைசெய்யுமாறு கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் கட்டங்கள் அமைக்கத் தடைவிதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராமசேவையாளர் பிரிவுகள் பகுதியளவிலும், 3 கிராமசேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் விடுவிக்கப்படவில்லை இதன்படி ஜெ-248, ஜெ-255,ஜெ-256, ஜெ-248 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியளவிலும் ஜெ-226, ஜெ-223, ஜே-234, ஜெ-235, ஜெ-238, ஜெ-240, ஜெ-241, ஜெ-242, ஜெ-243, கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியளவிலும் விடுவிக்கப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் பேச அங்கயன் பின்னடித்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளார்.