தமிழரசு இளைஞரணியும் அழைப்பு!
இலங்கையின் சுதந்தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுட்டிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அழைப்பு விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழரரசுகட்சியின் இளைஞரணி தலைவர் சேயோன் கரிநாளாக புறக்கணிப்பதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.
இதனிடையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கரிநாளாக அனுட்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மன்னார் நகர பொதுக்போக்குவரத்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, இந்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நீதிகோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசை பதில் அளிக்கக் கோரியும் பத்தாண்டுகள் கடந்தும் தாம் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்காத இலங்கை அரசின் சுதந்திரதினமான பெப்ரவரி 04ம் நாளை, கரிநாளாக தமிழர்கள் அனுட்டிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் அறிவித்தனர்.
இதன் பிரகாரம் பெப்ரவரி இரண்டாம் திகதி முதல் 06ம் திகதிவரை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாகவும், மட்டக்களப்பில் 03ம், 04ம் திகதியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணவுத் தவிரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரசியற் பிரமுகர்கள் அனைவரும் இனமத பேதங்கள் இன்றி தமக்கு ஒத்துழைப்பை வழங்கி, போராட்டத்திற்கு வலுச் சேர்க்க உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.