மீண்டும் ஊடகங்களிற்கு இராணுவ நெருக்கடி!
மீண்டும் ஊடகங்களிற்கு எதிரான இராணுவ அடக்குமுறைகள் வடகிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றது.
முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், நேற்று (28) அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதியன்று, குறித்த பாடசாலையின் மைதானத்தை துப்புரவு செய்தபோது, வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நிலத்தில் மேலும் மோட்டார் கைகுண்டுகள் புதையுண்டு காணப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைவாக, நேற்று (28) அவற்றை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியில் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், கனரக இயந்திரத்தைக் கொண்டு, அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வெடிக்காத நிலையில் நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனை செய்தி சேகரிப்பாதற்காக முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரியின் அனுமதியைப் பெற சென்ற ஊடகவியலாளர்களுக்கு, படையினர் அனுமதி மறுத்ததுடன், படங்கள் எதுவும் வெளிவரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
அத்துடன் அவர்களது கைத்தொலைபேசிகளை பரிசீலித்துள்ளதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.