பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன் நடைபெற்ற பேரணி
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி.
2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை முடக்கி தமிழீழ மண்ணிலே பெருங் கொடூரமாக மனிதநேயமின்றி சிறிலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு தமிழின அழிப்பினை மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி புலத்திலும், தாயகத்திலும், தமிழகத்திலுமாக எம் மக்கள் தொடர் அறவழிப்போராட்டம் மூலம் 11 ஆண்டுகளாக குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றார்கள்.
இருப்பினும் நீதியின் கால தாமதிப்பினை தமக்கு சார்பாக பயன்படுத்தி சிறிலங்கா சர்வாதிகார அரசு எப்படியாவது தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்னும் நோக்கில் தமிழீழ தேசம் எங்கும் இராணுவ மயமாக்கல்,நில அபகரிப்பு, வளச்சுறண்டல்கள் மற்றும் இனவழிப்பின் ஆதரங்களை அழிப்பதும் என வேகமாக மாற்று வடிவம் பெற்று தமிழின அழிப்பினை முன்னெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள்.
மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் கால நீடிப்பு தமிழின அழிப்பிற்கான ஆயுதமாகவே கருதப்படும் என்பது திண்ணம், எனவே எதிர் வரும் 46 வது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு வாழிட நாடுகளிலே தமிழ் மக்கள் பல அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிக்கின்றார்கள். அந்த வகையிலே பெல்சியம் வாழ் தமிழ் மக்க