தமிழர் சாதனையாளர் விருது தமிழ்மணி .கவிஞர்என்.வி.சிவநேசன் அவர்கட்கு
தமிழர் சாதனைவிருது தமிழ்மணி .கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கட்கு கனடா CTTV தொலைக்காட்சி நிர்வாகத்தினரால் 44 ஆண்டு தமிழ்பணி சேவையை பாராட்டி வழங்கப்பட்டது 24.01.2021 அன்று தாயத்தில் 1978 ஆண்டு முதல் தனியார் பாடசாலை ஆசியராக தொடங்கிய தமிழ்ப்பணி புலம்பெயர்ந்தும் இன்றுரை பல பரிமானங்களை கடந்து தொடர்ந்து கொண்டிருப்பதென்பதுபெருமிதத்துடன் வாழ்த்தவேண்டிய விடையம் ,
யேர்மனியில் 1992 ஆண்டு ஐரோப்பாவில் முதல் இருமொழி வானொலிலை (யேர்மன் தமிழ்) பன்பலை ஊடகத்தமிழ வானொலி ஒன்றை உருவாக்கிய பெருமைக்குரியவர் ,
அதனைத்தொடர்ந்து 1995 ஆண்டு மலரும் மாலைகள் என்றபெயரில் வீடியோபத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார் இவ்வெளியீடு சிங்கப்பூர் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து .1998 ஆண்டு பிரான்சு நாட்டில் இயங்கி வந்த A.B.C வானொலி ஊடகவும் உலகச்சேவையாக யேர்மன் நேரம் என்ற பெயரில் இயக்கியுள்ளார்,
அதே ஆண்டு புதியமலர்கள் என்ற சிறுவர் பாடல் நூல் 100 மேற்பட்ட பாடல்கள் உடன் வெளியீடு செய்துள்ளார்.300 க்கும்மேற்பட்ட சிறுவர்பாடல்கள் 200 விடுதலைப்பாடல் 400 மேற்பட்ட கவிதிதைகள் என அன்றைய காலத்தில் நிரந்தர வதிவுரிமை இல்லாத போதும் தமிழ் பணியை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது,
2000 ஆண்டு முதல் தமிழாலயத்தில் ஆசிரியர் ஆகவும் நிர்வாகியாகவும் இன்றுவரை பணியாற்றிக்கொண்டிருக்கிறர். 2002 ஆண்டளவில் குறளும் குழந்தைகளும் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளர். 2006 ஆண்டு ஐரோப்பரில் முதல் ஈழத்தமிழருக்கென தனித்துவமான தொலைகாட்சியை உருவாக்கி இன்று வரை (2021) இயக்கிவருகிறார் (நமதுகலைஞர்களின் ஆவணக்காப்பகமாக) அத்துடன் 10ஆண்டுகளுக்கு மேலாக www. Anaicoddai.co -News.Tamilmtv.com- TamilMtv.com என மூன்று இணையத்தளத்தையும் இயக்கிவருவது குறிப்பித்தக்கது,
2010 ஆண்டு புதியமலர்கள் என்ற இசைப்பேழை 16 சிறுவர் பாடல்களை உள்ளடக்கியது பாடல்களுக்கு இசையமைத்தவார் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி தேவராசா அவர்கள் பாடல்கள் அனைத்தும் யேர்மனியில் பிறந்து வளர்த சிறுவர்கள் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,இவ் இசைப்பேழை 2010 ஆண்டு உலகத்தமிழர் மாநாட்டு நிகழ்வின்போது இந்திய பின்னனிப்பாடகர் தீபன் சர்க்கரவர்த்தி அவர்களினால் வெளியீடு செய்யப்பட்டது அவருடன் இணைந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் இலங்கை கல்வி அமைச்சரின் செயலாளர் வெளியிட்டு வைத்தனர் ,
2018 தமிழ்மணி புலமைபரீட்யில் இவரும் இவர் மனைவயும் தித்தியடைந்தமைக்காக தமிழாலயத்தின் 28வது ஆண்டு நிறைவு விழாவில் வாழ்நாள் பேராசிரியர் திரு.திருமதி.சண்முகதாசு அவர்களில் கௌரவிக்கப்பட்டோம்.2010 ஆண்டு முதல் இவர் மனைவயும் (தவமலர்) இணைந்து 5ம் ஆண்டு முதல் 12 ஆண்டுக்கான 12 ஆசிரியர் பயிற்சி நூல்கள் வினாவிடை நூல்கள் கட்டுரை நூல்கள் எ ன தொடர்கிறது தமிழ் பணி மேலும் யேர்மனியில் உள்ள S.P.D கட்சியில் நகரப்பிரதி நிதியகாவும்( Iserlohn)எனத் தொடர்கிறது பணிகள்