5 இலட்சம்:இலங்கையில் முதலில் ஆமி,பொலிசுக்காம்?
கொரோனா வைரஸுக்கான Oxford-AstraZeneca தடுப்பூசி எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டுக்கு கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகளே நாட்டுக்கு கிடைக்கவுள்ளன என்றும்; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியானது முதலில் சுகாதாரத்துறையினருக்கும் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன் பின்னரே 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.