November 21, 2024

கோத்தா ஆணைக்குழு: உனக்கும் பெப்பே! அப்பனிற்கும் பெப்பே! சிவாஜி

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள

நிலையில் அதனை உனக்கும் பெப்பே உன் அப்பனிற்கும் பெப்பே எனும் ஏமாற்றென வர்ணித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு குறித்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1977ம் ஆண்டில் தமிழர்கள் மீது இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டதனையடுத்து சன்சோனிக் கமிசன் அமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு சாட்சியமித்த போதும் அந்த கமிசன் அறிக்கைக்கு என்ன நடந்ததென்பது தெரியாது.

கடைசியாக மகிந்த தலைமையில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, நிலைமாறு கால நீதிக்கான சுத்துமாத்து குழுவென பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

இவை எல்லாமுமே கிடப்பில் போடப்பட்டு விட்ட நிலையில் கோத்தபாய புதிதாக ஒன்றை அமைத்துள்ளார்.

நடந்தது இன அழிப்பென தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையாக ஓங்கி குரல் எழுப்புகையில் கோத்தபாய புதிதாக கமிசன் என புறப்பட்டிருப்பதாக தெரிவித்த சிவாஜிலிங்கம் அதனை உனக்கும் பெப்பே உன் அப்பனிற்கும் பெப்பே எனும் ஏமாற்றென வர்ணித்தார்.