இலங்கையில் மீண்டும் முடக்க நிலை?
இலங்கையில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளதனையடுத்து மீண்டும் முடக்க நிலை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.
நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது,
பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் அன்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது,
மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.,
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7ஆயிரத்து 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.