November 21, 2024

நிலாவரை விகாரையின் பெயர்?

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்

கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துள்ளது.இன்றைய தினம் நிலாவரை கிணற்றுப்பகுதியில் இராணுவத்தினர் பிரசன்னத்தில்; தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நளின் விரசிங்க தலைமையில் ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகள் ஆக்கிரமிப்புப் பணிகளாகவே அமைகின்றன.இனநல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் இங்கு பௌத்த கட்டுமாணம் அல்லது வரலாற்ற மோசடி நடக்கப்போவதாக வலி.கிழக்கு; ன பிரதேசசபை தவிசாளர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

நிலாவரை பகுதியை பிரதேச சபைதான் பங்காளராக முகாமை செய்கின்றதென   தவிசாளர் தெரிவித்திருந்த நிலையில் ,  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் உள்ளிட்ட மேலும் பல செயற்பட்டாளர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதனையடுத்து  தொல்லியல் திணைக்களத்தினர் எடுத்து வந்திருந்த மண்வெட்டிகள், தள்ளுவண்டி போன்றவற்றினை வெளியேறியிருந்தனர்.