இந்தியா ஊசி தான் இலங்கைக்காம்?
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளிலிருந்து பல கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புதன்கிழமை முதல் மானிய உதவியின் கீழ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸைப் பொறுத்தவரை, தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை அந்நாட்டு அரசாங்கங்கள் உறுதிப்படுத்தும் வரையில் இந்தியா காத்திருக்கிறது.