இலங்கை தொடர்பில் தீரமானம் வரும்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள, புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு, இலங்கை இணை அனுசரணை வழங்காது எனவும், மனித உரிமை பேரவை தீர்மானத்தில் இருந்து வெளியேறிய முடிவில், இலங்கை உறுதியாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு, பிரதான அனுசரணை வழங்கிய 5 நாடுகளான, கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, வடமசெடோனியா, மொன்டினீக்ரோ ஆகிய நாடுகள், புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளன.
இதேவேளை, முன்னைய தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய 5 நாடுகளும், புதிய தீர்மானத்தை உருவாக்குவதில், தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஆதரவளித்தாலும் ஆதரவளிக்காவிட்டாலும், அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என, சிவில் சமூகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.