November 21, 2024

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டணை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சிசிர த ஆப்ரூ, விஜித் மல்கொட மற்றும் பிரிதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று காலை இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்ட ஒகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கையில் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என கூறியிருந்தார்.

இதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதித்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.