November 22, 2024

நினைவுத் தூபி இடிப்பு! ஒரு கலாச்சார இனப்படுகொலையே – வைத்தியர் யமுனானந்தா

யாழ். பல்கலைக்கழகத்தில் 08.01.2021 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளது. இது ஓர் கலாச்சார இனப்படுகொலைச் செயலாகும். தமிழினத்தின் கூட்டான நினைவுகூர்தல் செயற்பாட்டுக்கு இனவாதரீதியான முறையில் நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடாகும். இது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதனை நாகரீக மனிதச் சமூகம் கண்டிக்க வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர். சி யமுனாநந்தா தெரிவித்தார்.இறந்தவர்களின் நினைவுச்சின்னங்களை அழித்தல் அவர்களது சமூகத்திற்குப் பாரிய சகவாழ்விற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்ச்சமூகம் தான் சார்ந்து எவ்வளவு இழப்புக்களைச் சந்தித்தாலும் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கு வீறுகொண்டு எழும்போது சில கோடரிக் காம்புகளால் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழ்மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்றும் நிலையாக உள்ளன. அதனை கணிதவெளியில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை காண்பிக்க வேண்டிய கடமை தற்போது யாழ். பல்கலைக்கழக நிகழ்வு எமக்கு ஏற்படுத்தி உள்ளது.

அடையாளங்களை அழிப்பதன் மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவுகளை மறைத்து வரலாற்றினை மாற்ற துணைபோகும் எத்தர்களின் செயல்களை நாம் துணிவோடு எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.