சிவகரனுக்கு எதிராக போராட்டமாம்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதியின் கருத்திற்கு எதிராக சிவகரன் வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.இதற்கு எதிராக எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன பேரணி நடத்தி சிவகரனின் கொடும்பாவி இழுத்து வரப்பட்டு எரிக்கப்படும் என அவரை வழிநடத்தும் குழு அறிவித்துள்ளது.
தனக்கெதிராக சேறுபூசலில் ஈடுபட்ட கருணாவதி பத்மநாதனிடம் நூறு கோடி இழப்பீடு கோரியுள்ளார் சிவகரன்.
கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகரன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் எழுதி வழங்கப்பட்ட அறிக்கையொன்று சகிதம் வருகை தந்து அதனை வாசித்திருந்த கருணாவதி பத்மநாதன் இந்திய உளவுத்துறை,இலங்கை உளவுத்துறையென போட்டு தாக்கியிருந்தார்.
இந்நிலையில் அதற்கெதிராக தனது சட்டதரணி ஊடக நஸ்டஈடு கோரி கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.