டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாகிசூடு நடத்தினர். ஒருவர் உயிரிழந்தாவும் மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிடனின் வெற்றியை சான்றளிக்கும் காங்கிரஸின் கூட்டு அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில்,
தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட சம்பவத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.