Mai 20, 2024

வடக்கை மீண்டும் வாட்டும் கொரோனா?

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்று திரும்பி வந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.பூநகரியை சேர்ந்த மூவரே வெளிநாடு செல்ல முற்பட்டு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனிடையே பருத்தித்துறையில் புதிதாக தோற்றம் பெற்றுள்ள கொத்தணி காரணமாக பதற்றம் தொற்றியுள்ளது.நேற்றைய தினம் பருத்தித்துறை வைத்தியசாலையில் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மந்திகை வைத்தியசாலையின் விடுதியொன்று மூடப்பட்டுள்ளது.

இதனிடையே  நீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியில் இருந்த இறங்கு துறையில் படுத்துறங்கிய இனம் தெரியாதவரால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

நீர்கொழும்பில்ல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும் ஓருவர் அப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக படுத்துறங்குவது மீனவர்களால் அவதானிக்கப்பட்டு தகவல் வழங்கப்பட்டது.

இதனால் அப் பகுதியின் ஊடாக மீன் பிடிப் படகுகள் செல்வது தடுக்கப்பட்டு பிறிதொரு பகுதியின் ஊடாக அனுமதிக்கப்பட்டது.

இவ்வாறு பி.சி.ஆர் பெறப்பட்ட நீர்கொழும்பு வாசி தற்போது குருநகர்ப் பகுதியில் ஓர் தனியான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ள  நிலையில் இன்று இரவு வெளிவரும் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னராக முடிவு எட்டப்படவுள்ளது.