சீன அரசை விமர்சித்த ஜாக்மா! இரண்டு மாதமாகக் காணவில்லை!
சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து விலகினார்.
கடந்த 90 களின் இறுதியில் ஒரு ஆங்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜாக் மா, தன் நண்பர்களுடன் இணைந்து, அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நண்பர்கள் இவரை விட்டு ஓடினாலும் தம் உறுதியில் விடாப்பிடியாய் நின்று, இன்று ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரையும், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் ராஜாவாகவும் திகழ்கிறார். சீன நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபருபவரும் ஜாக்மா தான
உலகின் பெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஜாக்மாட் அப்பதவியிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு விலகியிருந்த நிலையில்.இருப்பினும், அலிபாபா குழுமத்தில் 5.3 % பங்குகளைக் கொண்டுள்ள ஜாக்மா, இந்நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ஷி ஜின் பிங் தலைமையிலான சீனா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிரான ஜாக் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அவர் காணாவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஷாங்காயில் நடைபெற்ற கூட்டத்தில் ஜாக் மா பேசும்போது, சீனா புதிய வர்த்தகக் கண்டுபிடிப்புகளை ஜீரணிக்க முடியாமல் உள்ளது என வெளிப்படையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து சீன அரசு அதிகாரிகள் ஜாக் மாவை கண்டித்துள்ளதாகவும்,
பின்னர், ஜாக் காவின் சுமார் 2,73,000 கோடி பங்கு வெளியீட்டை சீன அதிகாரிகள் டுத்ததாகவும் இதையொட்டி ஜாக்மாவை இரு மாதங்களாக்க் காணவில்லை எனவும் அவர் எங்குள்ளார் என்பது தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.