இனப்படுகொலையாளிகளை வரிசைப்படுத்திய தமிழீழ அரசாங்கம்! இல்லை என்கின்றது இலங்கை அரசு
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் (2015) நடத்திய விசாரணை OISL அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்ட 18 இலங்கை இராணுவ அதிகாரிகளை, இனப்படுகொலையாளிகளாக அடையாளப்படுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில், தமது இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் ஒன்றிலும் ஈடுபடவில்லை எனச் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்தன இதனை நிராகரித்துள்ளார்.
பெப்ரவரி 2012 முதல் ஒக்டோபர் 2011 வரையிலான முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே ஐ.நாவின் OISL அறிக்கை வெளிவந்திருந்தது.
அனைத்துலக இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக நாழலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த கையேடு வெளியிடப்பட்டிருந்தது.
இனப்படுகொலை புரிந்த இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரிவரும் நாடு கடத்த தமிழீழ அரசாங்கம், இனப்படுகொலை யாளிகள் மீது சர்வதேச நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரியும் வருகின்றது.